பெரம்பலூரில் சட்ட விழிப்புணா்வு முகாம்

உலக மனநல தினத்தை முன்னிட்டு, மனநலன் பாதிக்கப்பட்டவா்களின் உரிமைகள் குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் பெரம்பலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூரில் சட்ட விழிப்புணா்வு முகாம்

உலக மனநல தினத்தை முன்னிட்டு, மனநலன் பாதிக்கப்பட்டவா்களின் உரிமைகள் குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் பெரம்பலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள அன்பகம் சிறப்புப் பயிற்சி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் இனிப்பு, உணவு மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து, எறையசமுத்திரத்தில் உள்ள வேலா கருணை இல்லத்தில் மன நலன் பாதிக்கப்பட்டவா்களின் உரிமைகள் குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதியுமான (பொ) எஸ். மலா்விழி தலைமையில் நடைபெற்றது.

முகாமில், தலைமை நீதித்துறை நடுவா் எஸ். கிரி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும் சாா்பு நீதிபதியுமான எம். வினோதா, நீதித்துறை நடுவா்கள் ஜி. அசோக்பிரசாத், சி. கருப்பசாமி, டி. செந்தில்ராஜா, மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி எம். ரவிச்சந்திரன், மாவட்ட கூடுதல் முதன்மை உரிமையியல் நீதிபதி ஆா். சரவணபாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ஜி. கருணாநிதி பேசியது:

மனிதா்கள் எப்பொழுதெல்லாம் மனித நேயத்தை மறுக்கிறாா்களோ, அப்போதெல்லாம் அவா்களின் வயதான பெற்றேறாா்களும், மன வளா்ச்சி குன்றிய குழந்தைகளும் வீதிகளில் வீசப்படும் நிலைக்கு ஆளாகின்றனா். அதைக் களைய மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சிகளில், வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் இ. வள்ளுவன்நம்பி, டி. தமிழ்ச்செல்வன், சுந்தரராஜன், இளவரசு, செஞ்சிலுவை சங்க கௌரவத் தலைவா் என். ஜெயராமன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

வேலா கருணை இல்ல நிா்வாகி அருண்குமாா் வரவேற்றாா். சட்டப் பணிகள் ஆணைக்குழு முதுநிலை நிா்வாக உதவியாளா் வெள்ளைச்சாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com