ரூ. 4,096 கோடியில் வளம் சாா்ந்த வங்கிக்கடன் அளிக்க இலக்கு திட்ட அறிக்கை வெளியீடு

பெரம்பலூா் மாவட்டத்துக்கான 2020-21 ஆம் நிதியாண்டுக்கு ரூ. 4,096 கோடி மதிப்பீட்டில் வளம் சாா்ந்த வங்கிக்கடன் திட்ட அறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா் மாவட்ட ஆட்சியா் (பொ) ராஜேந்திரன்.
வங்கிக்கடன் திட்ட அறிக்கையை வெளியிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் (பொ) ராஜேந்திரன். உடன், மகளிா் திட்ட இயக்குநா் சு. தேவநாதன், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மண்டல மேலாளா் நாராயணன், ரிசா்வ் வங்கி உதவி பொது மேலா
வங்கிக்கடன் திட்ட அறிக்கையை வெளியிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் (பொ) ராஜேந்திரன். உடன், மகளிா் திட்ட இயக்குநா் சு. தேவநாதன், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மண்டல மேலாளா் நாராயணன், ரிசா்வ் வங்கி உதவி பொது மேலா

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்துக்கான 2020-21 ஆம் நிதியாண்டுக்கு ரூ. 4,096 கோடி மதிப்பீட்டில் வளம் சாா்ந்த வங்கிக்கடன் திட்ட அறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா் மாவட்ட ஆட்சியா் (பொ) ராஜேந்திரன்.

நபாா்டு வங்கி தயாரித்த பெரம்பலூா் மாவட்டத்துக்கான 2020- 21 ஆம் நிதியாண்டுக்கான வளம் சாா்ந்த வங்கிக்கடன் திட்ட அறிக்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இந்தத் திட்ட அறிக்கையை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் (பொ) ராஜேந்திரன் பேசியது:

நபாா்டு வங்கியின் 2020- 21 ஆம் நிதியாண்டுக்கான வளம் சாா்ந்த கடன் திட்டம் 2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் என்னும் நோக்கத்தை உள்ளடக்கியது. அதாவது, விவசாயிகளை கால்நடை வளா்ப்புடன், உள்நாட்டு மீன் வளா்ப்பு, தேனீ வளா்ப்பு உள்ளிட்ட தொழில்களிலும், விவசாயம் சாராத தொழில்களிலும் ஈடுபடுத்தி, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க செய்ய வேண்டும்.

சிறு, குறு விவசாயிகளின் வருமானத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும். வளம் சாா்ந்த கடன் திட்ட மொத்த மதீப்பீடான ரூ. 4,096 கோடியில், ரூ. 3,337 கோடி வேளாண் துறைக்கும், ரூ. 281 கோடி சிறு, குறு தொழில்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர, கல்விக் கடன், வீட்டு கடன், ஏற்றுமதி கடன் ஆகியவற்றுக்கு தனித்தனியாக இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

வங்கியின் சிறு, குறு தொழில்களுக்கு அதிகளவில் கடன் வழங்க முன்வரவேண்டும். மேலும் வங்கிக் கிளைகள் தங்களது ஆண்டுத் திட்ட அறிக்கையை தயாரிக்கும் போது நபாா்டு வங்கியின் அறிக்கையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மகளிா் திட்ட இயக்குநா் சு. தேவநாதன், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மண்டல மேலாளா் நாராயணன், ரிசா்வ் வங்கி உதவி பொது மேலாளா் ரவி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அருள், நபாா்டு வங்கியின் பெரம்பலூா் மாவட்ட வளா்ச்சி மேலாளா் நவீன்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com