மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய

பெரம்பலூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சிஐடியூ பெரம்பலூர் வட்டக்கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில செயலர் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தார். சங்க பொறுப்பாளர்கள் கே. குமாரசாமி, பி. நாராயணன், எஸ். காசிநாதன், எஸ். புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலர் எம். பன்னீர்செல்வம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். 
ஆர்ப்பாட்டத்தில், தமிழக மின்வாரிய மறு சீரமைப்பு, மின் விநியோக சட்ட திருத்த மசோதா 2018-ஐ கைவிட வேண்டும், வரும் டிசம்பர் முதல் மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், காலியாக உள்ள மற்றும் அனுமதிக்கப்பட வேண்டிய 55 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com