செப். 12-இல் வேளாண் பொருள்கள் உற்பத்தி இலவசப் பயிற்சி

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில்

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், வேளாண்மையில் நுண்ணுயிர் பொருள்களின் பயன்பாடு மற்றும் உற்பத்தி குறித்த இலவசப் பயிற்சி செப். 12 ஆம் தேதி அளிக்கப்பட உள்ளது. 
இதுதொடர்பாக அந்த மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான வே.எ. நேதாஜி மாரியப்பன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வேளாண்மையில் நுண்ணுயிர் பொருள்களின் பயன்பாடு மற்றும் உற்பத்தி குறித்த பயிற்சி முகாமில், பயிரைத் தாக்கும் பூச்சி, நோய்களைக் கட்டுப்படுத்தும் நன்மை செய்யும் நுண்ணுயிர் உற்பத்தி மற்றும் பயன்படுத்தும் விதம் குறித்த தொழில்நுட்பங்கள் செயல்விளக்கம் மூலம் விவசாயிகளுக்கு விளக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தைச் சேர்ந்த பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநரை (97876 20754) காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்புகொண்டு தங்களது பெயரை பதிவு செய்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com