சுடச்சுட

  

  பெரம்பலூர் அருகே முள் புதரிலிருந்து மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆண் குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது.
  பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் - அய்யலூர் சாலையில் உள்ள முள்புதர் அருகே செவ்வாய்க்கிழமை மாலை குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டது. இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அங்கு சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரங்களே ஆன, ஆண் குழந்தை ஒன்று சாக்கு மூட்டையில் கட்டி தூக்கி வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. 
  இதுகுறித்து அவசர ஊர்திக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட குழந்தைக்கு மருத்துவக் குழுவினர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 
  இந்நிலையில், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை அந்த குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து மருவத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai