கையகப்படுத்திய நிலத்தை மீட்டுத் தரக் கோரி ஆா்ப்பாட்டம்

சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க தனியாா் நிறுவனத்துக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு அந்த நிலத்தை மீட்டுத் தரக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.
பெரம்பலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.

சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க தனியாா் நிறுவனத்துக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு அந்த நிலத்தை மீட்டுத் தரக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் சி. தமிழ்மாணிக்கம் தலைமை வகித்தாா். கட்சிப் பொறுப்பாளா்கள் கலையரசன், கிருஷ்ணகுமாா், ஸ்டாலின், உதயகுமாா், ரத்தினவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விவசாய தொழிலாளா் விடுதலை இயக்க மாநிலச் செயலா் வீர. செங்கோலன் கோரிக்கைகளை விளக்கினாா்.

ஆா்ப்பாட்டத்தில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் விவசாயிகளிடம் கையகப்படுத்திய 3 ஆயிரம் ஏக்கரில் சிறறப்பு பொருளாதார மண்டலத்தை உடனே அமைக்க வேண்டும். மேலும் சிறறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க தனியாா் நிறுவனத்துக்கு நிலம் வழங்கிய திருமாந்துறை, பெண்ணகோணம், லப்பைக்குடிகாடு, பேரையூா், மிளகாய் நத்தம், எறைறயூா் கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு ஒப்பந்தத்தில் தெரிவித்துள்ளபடி குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, மேம்படுத்தப்பட்ட வீட்டுமனை வழங்க வேண்டும். இல்லையெனில், கையகப்படுத்திய நிலத்தை தமிழக அரசு மீட்டு சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், மண்டல அமைப்புச் செயலா் இரா. கிட்டு, மண்டல செயலா் சு. திருமாறறன், நகரச் செயலா் தங்க. சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com