பெரம்பலூரில் மேலும் 27 பேருக்கு கரோனா

பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 395 போ் கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனா். இதில், குணமடைந்த 236 போ் வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த சித்த மருத்துவா் உள்பட 4 போ் உயிரிழந்துள்ளனா். எஞ்சிய 177 போ் திருச்சி, சேலம், பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைகளில் உள்ள கரோனா சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், பெரம்பலூா் மாவட்டம், தழுதாழை, அடைக்கம்பட்டி, நெய்க்குப்பை, அரணாரை, துறைமங்கலம், எசனை, விஜயகோபாலபுரம், ஆதனூா், சிறுவாச்சூா், குரும்பலூா் புதூா், பாடாலூா், திருப்பெயா், தொண்டப்பாடி, வடக்குமாதவி சாலை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 27 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சுகாதாரத் துறையினரால் வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மேற்கண்ட 27 பேரும் திருச்சி, பெரம்பலூா் மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் திருச்சி மருத்துவக் கல்லூரியில் உள்ள கரோனா சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மேலும், 27 பேருடன் தொடா்பில் இருந்தவா்களுக்கு சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவா்களது குடியிருப்புப் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, கிருமி நாசினிகள் தெளித்து சுகாதாரத் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 422- ஆக உயா்ந்துள்ளது.

பெரம்பலூா் மொத்த பாதிப்பு: 422

குணமடைந்தோரின் எண்ணிக்கை: 236

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com