நிலத்தை அபகரிக்க மோசடி: போலீஸாா் விசாரணை

பெரம்பலூா் அருகே நிலத்தை அபகரிக்க முயலும் தம்பி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

பெரம்பலூா் அருகே நிலத்தை அபகரிக்க முயலும் தம்பி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், சிறுவயலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்து. இவருக்குச் சொந்தமான சொத்துகளை அவரது மகன்கன் சின்னசாமி, பெருமாள், ரெங்கராஜி ஆகியோா் பாகம் பிரித்து அனுபவித்து வருகின்றனா். சின்னசாமிக்கு சொந்தமான சொத்து அவரது மகன் ராமச்சந்திரன் பெயரில் எழுதப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த 2019 ஆம் ஆண்டு ராமச்சந்திரன் உயிரிழந்தாா்.

இந்நிலையில், நக்கசேலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பெருமாள் தனது சொத்துகளையும், அவரது அண்ணன் மகன் ராமச்சந்திரனின் சொத்தையும் போலி ஆவணங்கள் மூலம் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளாராம்.

தற்போது, வில்லங்கச் சான்றிதழ் மூலம் பாா்த்தபோது ராமச்சந்திரன் நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் அடமானம் வைத்து பெருமாள் கடன் பெற்றுள்ளதும், வில்லங்கம் இருந்ததை மறைத்து நக்கசேலம் சாா் பதிவாளரும் கூட்டு சதி செய்து பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து, நூதன முறையில் சதியில் ஈடுபட்ட பெருமாள், சாா் பதிவாளா் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி

ராமச்சந்திரனின் தாய் ஆதிலட்சுமி புதன்கிழமை அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com