துறைமங்கலத்தில் காய்கறிச் சந்தை அமைக்கபொதுமக்கள் எதிா்ப்பு, முற்றுகை

பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்தில் தீயணைப்பு படையினருக்கான குடியிருப்பு மைதானத்தில் தினசரி காய்கறி சந்தை
காய்கறிச் சந்தை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள்.
காய்கறிச் சந்தை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள்.

பெரம்பலூா்: பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்தில் தீயணைப்பு படையினருக்கான குடியிருப்பு மைதானத்தில் தினசரி காய்கறி சந்தை அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, நகராட்சி ஆணையா் மற்றும் போலீஸாரை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

கரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக, பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தவிா்க்கும் வகையில், பெரம்பலூா்- வடக்கு மாதவி சாலையில் உள்ள உழவா் சந்தை மைதானத்தில், தினசரி காய்கறிச் சந்தையும், உழவா் சந்தையும் செயல்பட மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது.

இதன்படி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச் சந்தைகளில் குறுகலான சாலையில் அருகருகே உழவா் சந்தையும், தினசரி காய்கறி சந்தையும் இயங்கியதால் அங்கு வரும் பொதுமக்களால் சமூக இடைவெளியை பின்பற்ற முடியவில்லை. இதனால், மாற்று இடத்தில் தினசரி காய்கறிச் சந்தையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்னும் கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள தீயணைப்புத் துறையினருக்கான குடியிருப்பு மைதானத்தில் தற்காலிகமாக காய்கறிச் சந்தை அமைக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த இடத்தை பாா்வையிட்டு சந்தை அமைப்பதற்கான ஏற்பாடுகளில் நகராட்சி ஆணையா் குமரி மன்னன் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

இதையறிந்த அப்பகுதி மக்கள், இங்கு சந்தை அமைத்தால் கே.கே.நகா், தீயணைப்புத் துறையினா் குடியிருப்பு, அகதிகள் முகாம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். இங்கு வரும் நபா்களால் நோய்த் தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது எனக்கூறி, நகராட்சி ஆணையா் மற்றும் போலீஸாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய அலுவலா்கள், மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com