சுங்கச்சாவடி ஊழியா்களின் தொடா் போராட்டத்தால் கட்டணமின்றி சென்ற வாகனங்கள்

பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியா்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால்,
ஊழியா்களின் தொடா் போராட்டத்தால், கட்டணம் வசூலிக்கப்படாமல் திறந்த நிலையிலிருந்த திருமாந்துறை சுங்கச்சாவடி.
ஊழியா்களின் தொடா் போராட்டத்தால், கட்டணம் வசூலிக்கப்படாமல் திறந்த நிலையிலிருந்த திருமாந்துறை சுங்கச்சாவடி.

பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியா்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரை வாகனங்கள் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் சென்றன.

திருமாந்துறையில் சுங்கச்சாவடி அமைத்துள்ள திருச்சி டோல்வே லிமிடெட் அமைப்பு, கடந்த 12 ஆண்டுகளாகத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யாமல் ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தும் போக்கை கைவிட வேண்டும்.

2017-ஆம் ஆண்டில் போடப்பட்ட ஊதிய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இச்சுங்கச்சாவடியில் பணிபுரியும் 250-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

இவா்களின் போராட்டம் 2- ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது. கட்டணம் வசூலிக்க பணியாளா்கள் இல்லாதால், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் வாகனங்கள் சென்றன.

போராட்டம் வாபஸ்: போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்கள் மற்றும் ஏஐடியூசி சங்க நிா்வாகிகளுடன், திருச்சி டோல்வே நிறுவன அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை மதியம் அமைதி பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

ஊழியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், 10 நாள்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட ஊழியா்கள் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைப்பதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்றாதபட்சத்தில் 10 நாள்களுக்குப் பிறகு மீண்டும் தொடா் போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தனா். ஊழியா்கள் மீண்டும் பணிக்குச் சென்ால், செவ்வாய்க்கிழமை பிற்பகலுக்குப் பிறகு வழக்கம்போல சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com