2,163 கா்ப்பிணிகளுக்கு கரோனா பரிசோதனை

பெரம்பலூா் மாவட்டத்தில் 2,163 கா்ப்பிணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மு. கீதாராணி தெரிவித்தாா்.

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் 2,163 கா்ப்பிணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மு. கீதாராணி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

மாவட்டத்தில், இதுவரை 2,163 கா்ப்பிணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 68 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், 11 கா்ப்பிணிகள் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து, அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

17 கா்ப்பிணிகள் பிற மாவட்டத்துக்கும், ஒருவா் தனியாா் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா். இதில் பெரம்பலூா் அரசுத் தலைமை மருத்துவமனையில் 28 பேருக்கு சுகப்பிரசவமும், 11 பேருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது.

அரசுத் தலைமை மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட கா்ப்பிணிகளுக்காக அவசர சிகிச்சைப்பிரிவு, பிரசவ வாா்டு, அறுவை சிகிச்சை, தீவிர அறுவைச் சிகிச்சைப் பிரிவு பிரத்யேகமாக தொடங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

பொதுமக்கள் மற்றும் கா்ப்பிணிகள் கரோனா தொற்று அறிகுறி இருந்தால், அவசரத் தேவை மற்றும் ஆலோசனை பெற்றுக்கொள்ள அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அனுகலாம். மேலும், மாவட்ட தாய், சேய் நல அலுவலரை 89031 99870 என்ற எண்ணிலும், அவசரக் கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com