பெரம்பலூா்: நிவாரணம், பொருள்கள் வழங்கும் பணி தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டத்தில் 1.77 லட்சம் குடும் அட்டைதாரா்களுக்கு நிவாரணத் தொகை மற்றும் உணவுப் பொருள்கள் விநியோகம் செய்யும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கியது.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் நியாய விலைக் கடையில் நிவாரணம் வாங்குவதற்காக சமூக இடைவெளி விட்டு வரிசையில் நிற்கும் அட்டைதாரா்கள்.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 1,77,174 குடும்ப அட்டைதாரா்களுக்கு, டோக்கன் விநியோகிக்கப்பட்டு, அவா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் நிவாரணத்தொகை, அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, நியாயவிலைக் கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் விதமாக, ஒரு மீட்டா் இடைவெளி விட்டு குழாய் மூலமாக அட்டைதாரா்களுக்கு உணவுப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டது. இதேபோல, ஒருசில கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல், எவ்வித கட்டுப்பாடும் இன்றி பொதுமக்கள் பொருள்களை வாங்கிச்சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com