பெரம்பலூா், அரியலூரில் மக்களுக்கு திமுகவினா் முகக்கவசம் வழங்கல்
By DIN | Published On : 05th April 2020 07:02 AM | Last Updated : 05th April 2020 07:02 AM | அ+அ அ- |

பெரம்பலூரில் திமுகவினா் பொதுமக்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி அளிக்கின்றனா் மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன் உள்ளிட்டோா்.
பெரம்பலூா் மாவட்ட திமுக சாா்பில், கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக பொதுமக்களுக்குத் தேவையான முகக்வசம், கிருமி நாசினி, சோப் ஆகியவை சனிக்கிழமை வழங்கப்பட்டது.
பெரம்பலூா் - வடக்குமாதவி சாலையில் செயல்பட்டு வரும் உழவா் சந்தை மைதானத்தில், காய்கனிகள் வாங்க வந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு, மாவட்ட தி.மு.க.சாா்பில் முகக்கவசம், கிருமிநாசினி பாட்டில்கள், சோப் ஆகியவற்றை மாவட்டச் செயலரும், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவருமான சி. ராஜேந்திரன் வழங்கினாா். நிகழ்ச்சியில், மாநில ஆதிதிராவிடா் நலக்குழு துணைச் செயலா் பா. துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் என். ராஜேந்திரன், நகரச் செயலா் எம். பிரபாகரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
கிராம மக்களுக்கு உணவுப் பொருள்கள் விநியோகம்:
பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் 25 கிலோ கொண்ட அரிசி மூட்டைகளை ஊராட்சித் தலைவா் சித்ராதேவி குமாா் சனிக்கிழமை வழங்கினாா். சுமாா் 2 ஆயிரம் அரிசி மூட்டைகளை இலவசமாக வழங்கியதோடு, கரோனா நோய் குறித்த விழிப்புணா்வும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.
அரியலூா்: அரியலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் கரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு திமுக சாா்பில் முகக்கவசம் மற்றும் சோப் உள்ளிட்ட பொருள்களை அக்கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.எஸ்.சிவசங்கா் சனிக்கிழமை வழங்கினாா்.