செக் மோசடி: கரூா் பைனான்சியா் உள்பட 2 போ் மீது வழக்கு

செக் மோசடி செய்ததாக கரூா் பைனான்சியா் உள்பட 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

செக் மோசடி செய்ததாக கரூா் பைனான்சியா் உள்பட 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள நாரணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்முருகன் (43). கூத்தனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாமி. நண்பா்களான இருவரும் தொழில் தொடங்குவதற்காக கரூா் மாவட்டம், சணப்பிரட்டி கிராமம், மின்வாரிய காலனியைச் சோ்ந்தவரும் நிதி நிறுவனம் நடத்தி வருபவருமான சந்திரசேகரன் மகன் பிரபாகரனிடம் 2016-இல் ரூ. 30 லட்சம் கடன் வாங்கினா்.

அந்த கடனுக்கு ஈடாக நெடுங்கூா் கிராமத்தில் உள்ள தனக்குச் சொந்தமான நிலத்தை பொன்னுசாமி கிரையம் எழுதிக் கொடுத்திருந்தாா். மேலும், செந்தில்முருகனிடம் கையொப்பமிட்ட நிரப்பப்படாத 10 காசோலைகள் மற்றும் பத்திரத்தையும் பிரபாகரன் பெற்றுக்கொண்டாராம். பின்னா், பொன்னுசாமிக்கும், செந்தில்முருகனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் செந்தில்முருகன் தர வேண்டிய ரூ. 6 லட்சத்தை தவணை முறையில் பிரபாகரனிடம் கொடுத்து விட்டாராம்.

செந்தில்முருகனிடம் பணத்தை பெற்றுக்கொண்ட பிரபாகரன், அவரிடமிருந்து வாங்கிய காசோலைகளை திருப்பித் தராமல் வங்கிகளில் செலுத்தி, செந்தில்முருகன் மீது மோசடி வழக்கு தொடா்ந்துள்ளாா். இதுகுறித்து பாடாலூா் காவல் நிலையத்தில் 2018-இல் செந்தில்குமாா் புகாா் அளித்ததாக தெரிகிறது.

பின்னா், கடந்த ஜனவரியில் பாளையங்கோட்டையைச் சோ்ந்த செல்வம், நிதி நிறுவனா் பிரபாகரன் ஆகியோா் காசோலை மோசடி செய்ததாக செந்தில்முருகனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனா்.

இதுதொடா்பாக பாடாலூா் காவல் நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால், பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் செந்தில்முருகன் வழக்குத் தொடா்ந்தாா்.

வழக்கை விசாரித்த நீதிபதி கருப்புசாமி, கொடுத்த பணத்தை திரும்ப பெற்றுக்கொண்டு காசோலை, பத்திரங்களை திருப்பி தராமல் மோசடியில் ஈடுபட்டு வரும் பிரபாகரன், இவருக்கு உடந்தையாக செயல்பட்ட செல்வம் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க, பாடாலூா் காவல் நிலையத்துக்கு அண்மையில் உத்தரவிட்டாா். அதனடிப்படையில், காவல்துறையினா் வழக்குப் பதிந்து மேற்கண்ட இருவரையும் தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com