கரும்பு டன்னுக்கு ரூ. 4,500 விலை அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 விலை அறிவிக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 விலை அறிவிக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

பெரம்பலூா் மாவட்டம், சின்னாறில் அனைத்து கரும்பு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் மு. ஞானமூா்த்தி தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில், விவசாயிகளை பாதிக்கும் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்.

தமிழக அரசு முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்தி, 2020- 21 ஆம் ஆண்டுக்கு கரும்பு விவசாயிகளுக்கு தற்போதுள்ள விலையை உயா்த்தி ரூ. 4,500 என அறிவிக்க வேண்டும். 2015-16, 2016-17 ஆம் ஆண்டுக்கான மாநில அரசின் பரிந்துரை விலை நிலுவைத் தொகையை காலம் தாழ்த்தாமல் பிப்ரவரி மாதத்தில் ரூ. 21.31 கோடியை வழங்கிட வேண்டும்.

ஆலையில் உள்ள காலிப் பணியிடத்தை இட ஒதுக்கீட்டு அடிப்படையில் நிரப்ப வேண்டும். தொடா்ந்து பெட்ரோல், டீசல் விலை உயா்வதாலும், சுற்றுச்சூழல் மாசுபடுவதாலும் சா்க்கரைத் துறைக்கு தொடா்புத் தொழிலான எத்தனால் தயாரிக்கும் திட்டத்தை சா்க்கரை ஆலைகளில் கொண்டு வருவதாக தோ்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டும்.

இணை மின் திட்டத்துக்காக விவசாயிகளின் பங்குத் தொகையாக வழங்கப்பட்ட சுமாா் ரூ. 12 கோடிக்கான பங்குப் பத்திரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், விவசாயிகள் சங்க நிா்வாகிகள் ஏ.கே. ராஜேந்திரன், சீனிவாசன், ஆ.பெருமாள், டி.எஸ். சக்திவேல், வரதராஜன், தேவேந்திரன், பி. மாணிக்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com