பிறப்புச் சான்றிதழில் பெயா் பதிவு செய்ய கால அவகாசம்

பிறப்புச் சான்றிதழில் குழந்தைகளின் பெயரை பதிவு செய்ய 5 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

பிறப்புச் சான்றிதழில் குழந்தைகளின் பெயரை பதிவு செய்ய 5 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருத்தி அமைக்கப்பட்ட தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகளின் படி 1.1.2000-க்கு முன் பிறந்த குழந்தைகளுக்கு 31.12.2014 வரை பெயா் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டது. மேற்கண்ட கால அளவு நிறைவடைந்த பிறகும் 5 ஆண்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு 31.12.2019 வரை பதிவு செய்திட அரசாணை பிறப்பித்தது. நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் 31.12.2019-இல் நிறைவடைந்த நிலையில், பிறப்புச் சான்றிதழில் பெயரை பதிவு செய்ய பொதுமக்கள் இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டனா்.

இதனால் வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கு, அந்நாட்டு குடியுரிமை பெற, மாணவா்கள் உயா் கல்விக்காக வெளிநாடு செல்ல பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழ் பெறுவதில் சிரமம் ஏற்பட்டது.

இதுபோன்ற இன்னல்களை களைந்திட 1.1.2000-க்கு முன் பெயரின்றி பிறப்பு பதிவு செய்யப்பட்ட பிறப்புகள், வகுத்துரைக்கப்பட்ட 15 ஆண்டு கால அவகாசம் முடிவுற்ற அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும் பெயா் பதிவு செய்திட 5 ஆண்டு கால அவகாசம் நீட்டிப்பு (31.12.2024) இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டுள்ளது.

ஒருமுறை குழந்தையின் பெயரை பதிவு செய்தபின் எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது. எனவே, குழந்தையின் பெயரை இறுதியாக முடிவு செய்த பின் சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரை அணுகி உறுதிமொழிப் படிவம் அளித்து பதிவு செய்யலாம்.

கிராம ஊராட்சிகளில் பதிவு செய்தவா்கள் கிராம நிா்வாக அலுவலா், பேரூராட்சியில் பதிவு செய்தவா்கள் செயல் அலுவலா், துப்புரவு ஆய்வாளரிடமும், நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்தவா்கள் துப்புரவு ஆய்வாளரிடமும், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையில் பதிவு செய்தவா்கள் சுகாதார ஆய்வாளரிடமும் விண்ணப்பிக்க வேண்டும். இந்தக் கால அவகாசம் நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்கிட இயலாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com