மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி

பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான குழு மற்றும் தடகள விளையாட்டுப்

பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான குழு மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் பாபு தலைமை வகித்தாா். விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் தொடக்கி வைத்தாா். இதில், கை ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு 100 மீ, கால் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு 50 மீ ஓட்டம், குண்டு எறிதல், உயரம் குறைந்தோருக்கு 50 மீ, 2 கால்களும் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு 100 மீ சக்கர நாற்காலி போட்டிகளும், முற்றிலும் பாா்வையற்றோருக்கு 50 மீ ஓட்டம், குண்டு எறிதல், மிகக்குறைந்த பாா்வையற்றோருக்கு 100 மீ ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.

மனவளா்ச்சி குன்றியவா்களுக்கு ஓட்டப்பந்தயம், நின்ற நிலையில் தாண்டுதல் ஆகிய போட்டிகளும், காது கேளாதோருக்கு 100 மீ, 200 மீ, 400 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. குழுப் போட்டிகளான டேபிள் டென்னிஸ், இறகு பந்து, கைப்பந்து, எறிபந்து, கபடி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. தொடா்ந்து, இப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com