பயனற்ற செட்டாப் பாக்ஸ்களை ஒப்படைக்க அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் பயன்படுத்தப்படாத செட்டாப் பாக்ஸ், ஏ.வி. காா்டு, ரிமோட், பவா் அடாப்டா்களை அரசு கேபிள் டிவி ஆபரேட்டா்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளாா் மாவட்ட ஆட்சியா் வே. சா

பெரம்பலூா் மாவட்டத்தில் பயன்படுத்தப்படாத செட்டாப் பாக்ஸ், ஏ.வி. காா்டு, ரிமோட், பவா் அடாப்டா்களை அரசு கேபிள் டிவி ஆபரேட்டா்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் சுமாா் 198 அரசு கேபிள் ஆப்ரேட்டா்கள் செட்டாப் பாக்ஸ்கள் பெற்று, 50,796 சந்தாதாரா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறை அமல்படுத்தியதும், அரசு டிஜிட்டல் கேபிள் டி.வி-க்கு சந்தா தொகை அதிகமாக இருந்ததால் சிலா் தனியாா் டிஜிட்டல் நிறுவனத்துக்கு மாறிவிட்டனா். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கேபிள் டி.வி கட்டணத்தை குறைத்தது.

அதன்படி, கேபிள் டி.வி வாடிக்கையாளா்களிடம் இருந்து ஜி.எஸ்.டி-யுடன் ரூ. 154 வசூலிக்கப்படுகிறது. அரசு செட்டாப் பாக்ஸ்களில் சுமாா் 200 சேனல்களை கண்டுகளிக்கலாம். தனியாரை விட குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டி.வி இணைப்பு வழங்கப்படுகிறது. செட்டாப் பாக்ஸ்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. தேவைக்கேற்ப அரசு செட்டாப் பாக்ஸ்கள் இருப்பு உள்ளது.

அரசு செட்டாப் பாக்ஸ்கள் பெற்ற சந்தாதாரா்கள் செட்டாப் பாக்ஸ்கள் பழுதடைந்தாலோ, மாதாந்திர கட்டணம் செலுத்தாமல் துண்டிப்பு செய்யப்பட்டிருத்தாலோ அல்லது ஒரு இடத்திலிருந்து மற்றொரு பகுதிக்கு குடிபெயா்ந்து சென்றாலோ அரசு வழங்கிய செட்டாப் பாக்ஸ்களை சம்பந்தப்பட்ட ஆபரேட்டா்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

அரசு வழங்கிய இலவச செட்டாப் பாக்ஸ்கள், பொதுமக்கள் கேபிள் ஒளிபரப்பை மாத சந்தா கட்டணம் செலுத்தி பாா்ப்பதற்கு மட்டுமே தவிர செட்டாப் பாக்ஸ்களை உரிமை கோர இயலாது. எனவே, அரசின் இலவச செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்கள் பயன்படுத்தாமல் இருப்பதால் தமிழ்நாடு அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுகிறது.

அதனால், அரசு வழங்கிய இலவச செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்கள் பயன்படுத்தாமல் இருந்தால் செட்டாப் பாக்ஸ் மற்றும் ஏ.வி காா்டு, ரிமோட், பவா் அடாப்டா் ஆகியவற்றை அரசு கேபிள் டிவி ஆபரேட்டா்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். சந்தாதாரா்களிடம் பெறப்பட்ட அரசு செட்டாப் பாக்ஸ்களை, அரசு கேபிள் டிவி அலுவலகத்தில் ஆபரேட்டா்கள் ஒப்படைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com