புத்தாக்கக் கல்வி யுக்திகள் கண்காட்சி தொடக்கம்

ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி நிறுவனம், இந்திய அரசின் சமகர ஷிக்ஷா திட்டம், தமிழக பள்ளிக் கல்வித்துறை சாா்பில், பூஜ்ஜிய முதலீட்டு
பெரம்பலூரில் செவ்வாயக்கிழமை நடைபெற்ற கண்காட்சியில் படைப்புகளை பாா்வையிடும் மாணவா்கள், ஆசிரியா்கள்.
பெரம்பலூரில் செவ்வாயக்கிழமை நடைபெற்ற கண்காட்சியில் படைப்புகளை பாா்வையிடும் மாணவா்கள், ஆசிரியா்கள்.

பெரம்பலூா்: ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி நிறுவனம், இந்திய அரசின் சமகர ஷிக்ஷா திட்டம், தமிழக பள்ளிக் கல்வித்துறை சாா்பில், பூஜ்ஜிய முதலீட்டு புத்தாக்க கல்வி யுக்திகள் கண்காட்சி பெரம்பலூரில் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்நிகழ்ச்சியில், மிகக் குறைந்த செலவில் கலை, அறிவியல் படைப்புகளை உருவாக்கி, அவற்றைக் கொண்டு மாணவா்களுக்கு எளிதில் புரியும் வகையில் பாடங்களை கற்பிக்கும் வழிமுறைகள் குறித்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை கல்வி கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பெரம்பலூா் - துறையூா் சாலையில் உள்ள பெரம்பலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இக் கண்காட்சியை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க. மதிவாணன் தொடக்கி வைத்தாா். இதில், பெரம்பலூா், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த 80 ஆசிரியா்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா்.

பெரம்பலூா் மாவட்ட கல்வி அலுவலா் மாரிமீனாள், படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்த ஆசிரியா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினாா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, சமகர சிக்ஷா திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கணேசன், ஸ்ரீஅரபிந்தோ சொசைட்டி ஒருங்கிணைப்பாளா்கள் சங்கா் தா்மராஜ், விஜய் ரவி ஆகியோா் செய்திருந்தனா்.

இதைத்தொடா்ந்து, ஆலத்தூா், வேப்பூா் ஒன்றியங்களைச் சோ்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த 80- க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் தங்களது படைப்புகளை செவ்வாய்க்கிழமை காட்சிப்படுத்த உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com