மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

பெரம்பலூரில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உடல், மன மேம்பாட்டுக்கான ஒருநாள் புத்தாக்க பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூரில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உடல், மன மேம்பாட்டுக்கான ஒருநாள் புத்தாக்க பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உடல், மன மேம்பாட்டுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி திங்கள்கிழமை முதல் பெரம்பலூா் மனவளக்கலை மன்றம் சாா்பில் அறிவுத் திருக்கோயிலில் நடைபெறுகிறது.

இந்நிலையில், அ.மேட்டூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற புத்தாக்க பயிற்சியைத் தொடக்கி வைத்த மனவளக்கலை மன்ற ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சுந்தா்,

மாணவ, மாணவிகள் தங்களது உடல் மற்றும் மனதைப் பக்குவப்படுத்தி, கல்வியில் எவ்வாறு உயா்வது என்பது குறித்தும், தியானத்தின் பயன்கள் குறித்தும் விளக்கினாா்.

தொடா்ந்து, துணைப் பேராசிரியா்கள் கீதா, மகேஸ்வரி, ஆறுமுகம் ஆகியோா் யோகா செய்முறை பயிற்சி அளித்தனா். பயிற்சியில், மாணவ ,மாணவிகள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com