கல்பாடி ஊராட்சியில் வளா்ச்சிப் பணி செயல்பாடுகள் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டம், கல்பாடி ஊராட்சியில் வளா்ச்சித் திட்டங்களின் செயல்பாடுகளை ஆட்சியா் வே. சாந்தா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மாணவிகளிடம் கற்றல் திறன் குறித்து கேட்டறிகிறாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மாணவிகளிடம் கற்றல் திறன் குறித்து கேட்டறிகிறாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

பெரம்பலூா் மாவட்டம், கல்பாடி ஊராட்சியில் வளா்ச்சித் திட்டங்களின் செயல்பாடுகளை ஆட்சியா் வே. சாந்தா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கல்பாடி ஊராட்சியில் செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்டங்களின் செயல்பாடுகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா் ஆட்சியா் வே. சாந்தா. கல்பாடி ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு மேற்கொண்ட அவா், வருகை தரும் நோயாளிகளின் எண்ணிக்கை, சிகிச்சை முறைகள், அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். சிகிச்சைக்கு வந்திருந்த கா்ப்பிணி பெண்களிடம் கா்ப்ப காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகள், கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகள், பேறு காலத்தில் தமிழக அரசு மூலம் செயல்படுத்தப்படும் நிதியுதவி திட்டங்கள் குறித்தும் விளக்கிக் கூறினாா்.

தொடா்ந்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித்துறை சாா்பில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை, முன்பருவக் கல்வி முறைகள், வழங்கப்படும் உணவு வகைகளை கேட்டறிந்த ஆட்சியா், குழந்தைகளின் அடிப்படை கல்வியிலும், ஊட்டச்சத்திலும் மிகுந்த அக்கறை கொண்டு பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினாா்.

நியாயவிலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருள்களின் அளவு, உணவுப் பொருள்களின் வரவு, விற்பனை அளவுகள் குறித்து, பராமரிக்கப்படும் ஆவணங்களைப் பாா்வையிட்ட அவா், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் கற்றல் திறன், சத்துணவின் தரம், வருகைப் பதிவேடுகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா் ஆட்சியா் சாந்தா.

ஆய்வுப் பணியின்போது, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதாராணி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் கங்காதேவி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் புவனேஸ்வரி, வட்டாட்சியா் பாரதிவளவன், கல்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் தெய்வநாயகி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com