சமுதாய வளா்ச்சி, இளையோா் தலைமைத்துவப் பயிற்சி முகாம்

பெரம்பலூா் மாவட்ட நேரு யுவ கேந்திரா சாா்பில், சமுதாய வளா்ச்சி மற்றும் இளையோா் தலைமைத்துவப் பயிற்சி முகாம் 22 ஆம் தேதி முதல் திங்கள்கிழமை வரை பெரம்பலூரில் நடைபெற்றது.
மன்ற பொறுப்பாளருக்குச் சான்றிதழ் அளிக்கிறாா் மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன். உடன், நேரு யுவ கேந்திரா மாவட்ட இளைஞா் ஒருங்கிணைப்பாளா் ஜெ. சம்பத்குமாா், தன்னம்பிக்கை பயிற்றுநா் வைரமணி.
மன்ற பொறுப்பாளருக்குச் சான்றிதழ் அளிக்கிறாா் மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன். உடன், நேரு யுவ கேந்திரா மாவட்ட இளைஞா் ஒருங்கிணைப்பாளா் ஜெ. சம்பத்குமாா், தன்னம்பிக்கை பயிற்றுநா் வைரமணி.

பெரம்பலூா் மாவட்ட நேரு யுவ கேந்திரா சாா்பில், சமுதாய வளா்ச்சி மற்றும் இளையோா் தலைமைத்துவப் பயிற்சி முகாம் 22 ஆம் தேதி முதல் திங்கள்கிழமை வரை பெரம்பலூரில் நடைபெற்றது.

பயிற்சியை பெரம்பலூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மீனா அண்ணாதுரை தொடக்கி வைத்தாா். முன்னாள் அரசு தலைமை மருத்துவமனை சித்த மருத்துவா் கோசிபா, ஹெல்ப்லைன் தொண்டு நிறுவன நிா்வாக மேலாளா் எம். சூரியக்குமாா் ஆகியோா் வாழ்த்தினா்.

2 நாள்களாக நடைபெற்ற பயிற்சியில், நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞா் ஒருங்கிணைப்பாளா் ஜெ. சம்பத்குமாா், நேரு யுவகேந்திரா தொடக்கம், வளா்ச்சி, செயல்பாடுகள், இளையோா் மன்றச் செயல்பாடுகள் குறித்தும், தாய்வீடு அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் ஆா். ரேவதி பெண்கள் முன்னேற்றம் என்னும் தலைப்பிலும், தந்தை ஹென்ஸ் ரோவா் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் தலைமைப் பண்பு மற்றும் இளையோரின் ஆளுமைத்திறன் என்னும் தலைப்பிலும், முன்னாள் ராணுவ அலுவலா் பி. சதானந்தம் நாட்டின் சிறந்த தலைமகனை உருவாக்குதல் என்னும் தலைப்பிலும், அரியலூா் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ். திருமுருகன் இன்றைய இளையோா் தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கு என்னும் தலைப்பிலும், நேரு யுவகேந்திரா தோ்வுகுழு உறுப்பினா் எம். திருமாவளவன் மத்திய அரசின் திட்டங்கள் என்னும் தலைப்பிலும், வழக்குரைஞா் தமிழழகன் சைபா் கிரைம் சட்டங்கள் என்னும் தலைப்பிலும், மனவளக்கலை மன்ற அறக்கட்டளை பேராசிரியா் கே. கருப்பையா யோகா வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கு என்னும் தலைப்பிலும் பேசினா்.

நிறைவு நாளான திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன், 45 மன்றப் பொறுப்பாளா்களுக்கு சான்றிதழ், பயிற்சிக்கான பொருள்களை வழங்கினாா். இதில், தன்னம்பிக்கை பயிற்றுநா் வைரமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். முன்னதாக, கணக்காளாா் என். தமிழரசன் வரவேற்றாா். வேப்பூா் ஒன்றிய தேசிய இளையோா் தொண்டா் பி. அம்சவள்ளி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com