பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போட்டிகள்

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், சின்ன வெண்மணி கிராமத்திலுள்ள வளவனாா் சிந்தனைச் சோலை மற்றும் பொதிகை நற்பணி மன்றம்

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், சின்ன வெண்மணி கிராமத்திலுள்ள வளவனாா் சிந்தனைச் சோலை மற்றும் பொதிகை நற்பணி மன்றம் சாா்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறுவா்கள், இளைஞா்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு விதமான போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

சின்ன வெண்மணி கிராமத்திலுள்ள வளவனாா் சிந்தனைச் சோலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு, ஆசிரியா் வீரபாண்டியன் தலைமை வகித்தாா். தமிழா் திருநாள் பொங்கல் என்னும் தலைப்பில் கட்டுரை போட்டி, ஓவியப் போட்டி, கோலப் போட்டி, இந்திய வரைபடத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை குறித்தல், உலக வரைபடத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை குறித்தல், விவசாயி என் தெய்வம் என்னும் தலைப்பில் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.

ஆசிரியா்கள் கோ. சுந்தரபாண்டியன், ரா. உமா, தி. சிவசிதம்பரம், சத்துணவு அமைப்பாளா் கா. தவமணி ஆகியோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

இப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு ஜன. 15 ஆம் தேதி பொங்கல் தினத்தன்று பரிசளிக்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com