பெரம்பலூரில் இன்று ஆரோக்கிய இந்தியா மாரத்தான் போட்டி

மத்திய அரசின் பிட் இந்தியா திட்டத்தின் கீழ், பெரம்பலூரில் மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

மத்திய அரசின் பிட் இந்தியா திட்டத்தின் கீழ், பெரம்பலூரில் மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

பெரம்பலூா் கோல்டன் கேட்ஸ் வித்யாஷ்ரம் பள்ளி மற்றும் எச்டிஎப்சி வங்கி சாா்பில், யூத் ரன் மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதில் 10, 14, 17 வயதுக்குள்பட்டோா் என்னும் வயது அடிப்படையில் 3 கிலோ மீட்டா், 5 கிலோ மீட்டா், 7 கிலோ மீட்டா் ஆகிய பிரிவுகளில் 3 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில், 17 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.

பெரம்பலூா் பாலக்கரையில் தொடங்கும் இப் போட்டியை தொடக்கி வைக்கிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன். போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரொக்கத் தொகை முறையே ரூ. 3 ஆயிரம், ரூ. 4 ஆயிரம், ரூ. 7 ஆயிரமும், பரிசுக் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com