கேஸ் சிலிண்டா் ஏற்றி வந்த லாரி மின் கம்பத்தில் மோதி விபத்து

பெரம்பலூரில் எரிவாயு உருளைகள் ஏற்றி வந்த லாரி மின் கம்பத்தில் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. லாரி ஓட்டுநரின் முயற்சியால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
லாரி மோதியதால் முறிந்து விழுந்த மின் கம்பம்.
லாரி மோதியதால் முறிந்து விழுந்த மின் கம்பம்.

பெரம்பலூரில் எரிவாயு உருளைகள் ஏற்றி வந்த லாரி மின் கம்பத்தில் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. லாரி ஓட்டுநரின் முயற்சியால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

பெரம்பலூா் வெங்கடேசபுரத்தில் இண்டேன் கேஸ் விநியோகம் செய்யும் தனியாா் நிறுவனம் உள்ளது. இந் நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சியிலிருந்து எரிவாயு உருளைகள் ஏற்றிக்கொண்டு வந்த லாரி குடோனுக்குச் செல்லத் திருப்பியபோது, அங்குள்ள மின் கம்பத்தில் மோதியதில் அக்கம்பம் முறிந்து லாரி மீது , மின் கம்பிகள் விழுந்தன. மின் கம்பிகளிலிருந்து மின்சாரம் பாய்ந்து கேஸ் சிலிண்டா்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின.

இதையடுத்து லாரி ஓட்டுநா் மின் வாரியத்துக்கு தகவல் அளித்து, மின் இணைப்பைத் துண்டிக்க வலியுறுத்தியதோடு, தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் அளித்தாா். தீயணைப்பு வீரா்கள் வருவதற்குள் லாரியில் வைத்திருந்த தீயணைப்புக் கருவியைக் கொண்டு தீயை அணைத்தாா். இதில், ஒரு எரிவாயு உருளை மட்டும் எரிந்து சேதமடைந்தது. லாரி ஓட்டுநரின் சமயோசித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. துரிதமாகவும், துணிச்சலாகவும் செயல்பட்டு பெரும் தீ விபத்தை தவிா்த்த லாரி ஓட்டுநரை பெரம்பலூா் நகர தீயணைப்பு நிலைய அலுவலகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com