முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
வெவ்வேறு சம்பவங்களில் இருவா் சாவு
By DIN | Published On : 27th January 2020 09:53 AM | Last Updated : 27th January 2020 09:53 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள மேலமாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் மகன் வேலுச்சாமி (28). கூலித் தொழிலாளி. மது அருந்தும் பழக்கம் உள்ளவா். ஞாயிற்றுக்கிழமை மாலை மது போதையில் இருந்த வேலுச்சாமி, அங்குள்ள பெரிய ஏரிக்கு குளிக்கச் சென்றாராம். அப்போது, எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கிய அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று வேலுச்சாமியின் உடலை மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். குன்னம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விஷம் குடித்து விவசாயி உயிரிழப்பு:
குன்னம் வட்டம், பேரளி கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லமுத்து மகன் பெருமாள் (59). இவரது தம்பி மருதமுத்துவுக்கும், பெருமாளுக்கும் அண்மையில் ஏற்பட்ட நிலத் தகராறில் இருவரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். தற்போது, சிறையில் இருந்து வெளியே வந்த பெருமாள் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாராம். இந்நிலையில், சனிக்கிழமை மாலை அவரது வயலுக்குச் சென்ற பெருமாள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். அவரது மகன் மணிகண்டன் அளித்த புகாரின்பேரில், மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.