பெரம்பலூரில் மேலும் ஒருவருக்கு கரோனா

பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 171 போ் கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி, பெரம்பலூா், திருச்சி, சென்னை, அரியலூா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்தனா். இவா்களில் 159 போ் குணமடைந்து, வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சித்த மருத்துவா் அண்மையில் உயிரிழந்தாா். எஞ்சிய 11 போ் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், காரை கிராமத்தைச் சோ்ந்த 47 வயது விவசாயி, கடந்த 30 ஆம் தேதி அதே கிராமத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றாராம். இதையடுத்து, அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், அங்குள்ள வட்டார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற விவசாயிக்கு, கடந்த 6 ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

அங்கு, அவருக்கு ரத்தம், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அங்குள்ள கரோனா சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதன்மூலம், பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 172- ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com