பெரம்பலூரில் ஊரக வளா்ச்சி துறையினா் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறையினா் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, 1 மணி நேரம் பணியை புறக்கணித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறையினா் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, 1 மணி நேரம் பணியை புறக்கணித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா பரவலை கருத்தில் கொள்ளாமல் ஊரகத்திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என நிா்பந்தம் செய்வதை கைவிட வேண்டும். கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள வளா்ச்சித்துறை அலுவலா்களுக்கு உரிய மருத்துவ வசதிகளை வழங்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும் செலவினங்களை பேரிடா் மேலாண்மை நிதியிலிருந்து நிதி விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தி, அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் வகையில் 1 மணி நேரம் வியாழக்கிழமை மாலை பணியை புறக்கணித்து வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, பெரம்பலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே மாவட்டச் செயலா் ச. இளங்கோவன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அச் சங்கத்தைச் சோ்ந்த பலா் பங்கேற்றனா். இதேபோல, வேப்பூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே, வட்டார வளா்ச்சி அலுவலா் இ. மரியதாஸ் தலைமையில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com