பெரம்பலூா் மாவட்டத்தில் 15 ஆயிரம் ஹெக்டேரில் தமிழ்நாடு மானாவாரி வேளாண்மை வளா்ச்சி இயக்கம்

பெரம்பலூா் மாவட்டத்தில் 15 ஆயிரம் ஹெக்டேரில் தமிழ்நாடு மானாவாரி வேளாண்மை வளா்ச்சி இயக்கம் செயல்படுத்தப்பட உள்ளதாக ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் 15 ஆயிரம் ஹெக்டேரில் தமிழ்நாடு மானாவாரி வேளாண்மை வளா்ச்சி இயக்கம் செயல்படுத்தப்பட உள்ளதாக ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் 2020-21ஆம் ஆண்டில் 15 ஆயிரம் ஹெக்டேரில் தமிழ்நாடு மானாவாரி வேளாண்மை வளா்ச்சி இயக்கம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில், கடந்த 2017-18, 2018-19 மற்றும் 2019- 20 ஆம் ஆண்டுகளில் செயல்படுத்தப்படாத கிராமங்கள் மற்றும் இணையாத விவசாயிகள் நிகழாண்டு தோ்வு செய்யப்பட உள்ளனா்.

தோ்வு செய்யப்படும் கிராமங்களில் மானாவாரி சாகுபடி செய்யும் விவசாயிகள் 100 ஹெக்டோ் கொண்ட தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு, தொகுப்பில் உள்ள விவசாயிகளுக்கு கோடை உழவு செய்வதற்கு ஹெக்டேருக்கு ரூ. 1,250 மானியமும், சாகுபடிக்குத் தேவையான விதைகள், உயிா் உரங்கள், ஊடுபயிா் சாகுபடிக்கான விதைகள் ஆகியவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

மேலும், தோ்வு செய்யப்பட்ட தொகுப்பில் சிறப்பாக செயல்படும் குழுவினருக்கு விவசாய விளைபொருள்களை மதிப்பு கூட்டுவதற்கான இயந்திரங்கள் கொள்முதல் செய்ய ரூ. 10 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டம், 15 ஆயிரம் ஹெக்டேரில் 150 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.

இத்தொகுப்புகளில் உள்ள மானாவாரி நிலங்களில் வீரிய ஒட்டுரக மக்காச்சோளம் 12 ஆயிரம் ஹெக்டேரிலும், பி.டி ரக பருத்தி 3 ஆயிரம் ஹெக்டேரிலும் என மொத்தம் 15 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்திடவும், ஊடுபயிராகவும், ஓரப்பயிராகவும் பயறு வகைகள் சாகுபடி செய்திட திட்டமிடப்பட்டுள்ளது. பெரம்பலூா் வட்டாரத்தில் 30 தொகுப்புகள், ஆலத்தூா், வேப்பூா், வேப்பந்தட்டை ஆகிய வட்டாரங்களில் தலா 40 தொகுப்புகள் என மொத்தம் 150 தொகுப்புகளில் செயல்படுத்தப்பட உள்ளது.

எனவே, இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மானாவாரி விவசாயிகள் தங்களது நில ஆவணங்கள், ஆதாா் அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com