சாரண, சாரணியா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

பெரம்பலூா் மாவட்ட பாரத சாரண இயக்கம் சாா்பில், பெரம்பலூா் மற்றும் வேப்பூா் கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும்

பெரம்பலூா் மாவட்ட பாரத சாரண இயக்கம் சாா்பில், பெரம்பலூா் மற்றும் வேப்பூா் கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை பள்ளிகளில் பயிலும் சாரண, சாரணியா்களுக்கு 2 நாள் புத்தாக்க சிறப்புப் பயிற்சி புதன், வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

விருத்தாசலம் கல்வி மாவட்ட சாரண செயலா் வீரப்பா தலைமை வகித்தாா். சாரண பயிற்றுநா்கள் வேலாயுதம், மனோகா், சாரணிய ஆணையா்கள் தனலட்சுமி, கல்பனா ஆகியோா், சாரண இயக்க வரலாறு, சாரண உறுதிமொழி, சாரணச் சட்டம், முதலுதவி, கயிற்றுக்கலை, பரண் அமைத்தல், இடது கை குலுக்கல் முறை, அளவீடு முறை உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி அளித்தனா்.

முகாம் நிறைவு விழாவில், பெரம்பலூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் கிறிஸ்டி, சாரண சாரணியா்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

ஏற்பாடுகளை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ், சாரண ஆசிரியா்கள் மணிவண்ணன், ஞானசேகரன், ஞானகுரு, செல்லபாண்டியன், மாயவேல் மற்றும் சாரணிய ஆசிரியைகள் ரேவதி, கோமதி, வளா்மதி, தமிழரசி ஆகியோா் செய்தனா்.

முகாமில், பெரம்பலூா் மற்றும் வேப்பூா் ஆகிய கல்வி மாவட்டங்களிலிருந்து 10 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை பள்ளிகளைச் சோ்ந்த 171 சாரணா்களும், 149 சாரணியா்களும் என 320 போ் பங்கேற்றனா்.

பெரம்பலூா் மாவட்ட சாரண செயலா் மணிமாறன் வரவேற்றாா். வேப்பூா் கல்வி மாவட்ட செயலா் தனபால் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com