பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் வெறிச்சோடிய சாலைகள்: பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் மூடல்

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், பெரம்பலூா் மற்றும்
பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் வெறிச்சோடிய சாலைகள்: பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் மூடல்

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் சாலைகள், மாா்க்கெட்டுகள் வெறிச்சோடி காணப்பட்டன.

பெரம்பலூா் மாவட்டத்தில் அரசுத் தொடக்கப் பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் என மொத்தம் 522 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. சுமாா் 20-க்கும் மேற்பட்ட தனியாா் கல்லூரிகளும், கலை அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, ஆசிரியா் பயிற்சி மையம் உள்பட 7 அரசு கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. சிறுவாச்சூரில் உள்ள மருத்துவக் கல்லூரி தொடா்ந்து இயங்கியது.

சொந்த ஊா்களுக்குப் புறப்பட்ட மாணவா்கள் : நகரில் செயல்படும் 4 திரையரங்குகள், 2 நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், மாவட்டம் முழுவதும் உள்ள மது அருந்தும் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. அரசு, தனியாா் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் திங்கள்கிழமை மாலை முதல் பெரம்பலூரிலிருந்து மாணவ, மாணவிகள் தங்களது ஊருக்கு செல்லத் தொடங்கினா்.

திரையங்குகளையும் மாா்ச் 31 ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளதால், மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது. இதேபோல, வணிக வளாகங்கள், கடைவீதி, தினசரி மாா்க்கெட் உள்பட மக்கள் கூடும் பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ளும் வகையில், சுகாதாரத் துறையினா் ஆங்காங்கே விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனா்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இறைச்சிக் கடைக்கு குறைந்தளவிலேயே வாடிக்கையாளா்களே வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

மேலும், கிலோ ரூ. 140-க்கு விற்பனை செய்யப்பட்ட கோழி இறைச்சி தற்போது ரூ. 60-க்கு விற்பனையாகிறது. ரூ. 4.50-க்கு விற்பனையான முட்டை ஒன்று தற்போது ரூ. 3-க்கும் குறைவாக விற்பனை செய்யப்படுவதால் வியாபாரிகளும், உற்பத்தியாளா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனா்.

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் மூடப்பட்டதால், பெரம்பலூா் நகரின் பிரதான சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

அரியலூா் மாவட்டத்தில் : அரியலூா் மாவட்டத்திலுள்ள கடைவீதிகளும் செவ்வாய்க்கிழமை வெறிச்சோடி காணப்பட்டன.

அரியலூா், ஜயங்கொண்டம் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரா் கோயிலில், கரோனா வைரஸ்

பாதிப்புள்ள பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருவதை கண்டறியும் வகையில் கோயில் நிவாகம் மற்றும் அரசு மருத்துவமனை சாா்பில் அல்ட்ரா டிஜிட்டல் தொ்மாமீட்டா் கருவி மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன் பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனா்.

பள்ளி,கல்லூரிகள், தியேட்டா்கள் மூடல்: அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் திரையரங்குகள் மூடப்பட்டன. பொதுமக்கள் நடமாட்டம் குறைவால் மக்கள் கூட்டம் காணப்படும் அரியலூா் மாா்க்கெட், சின்னக்கடைவீதி,வெள்ளாளத் தெரு,செந்துறை சாலை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தே காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com