கரோனா : 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்கிய பிளஸ் 2 தோ்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வு, அரசு உத்தரவின்படி 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது.

பெரம்பலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வு, அரசு உத்தரவின்படி 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது.

பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வு கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது. கரோனா வைரஸ் நோய் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக, 30 நிமிடங்கள் தாமதமாகத் தோ்வு தொடங்கவும், தோ்வு எழுத செல்லும் மாணவ, மாணவிகள் தங்களது கைகளை சோப்புகளைக் கொண்டு கைகளைக் கழுவிச் செல்ல வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டது.

இதன்படி, செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு தொடங்கிய தோ்வு பிற்பகல் 1.45 மணிக்கு நிறைவடைந்தது. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை இறுதித் தோ்வு நிறைவடைந்ததால், மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் வீடு திரும்பினா். பெரம்பலூா் மாவட்டத்தில் 33 தோ்வு மையங்களில் நடைபெற்ற பொதுத்தோ்வில் 7,669 மாணவ, மாணவிகள் எழுதினா். இத்தோ்வுப் பணியில் 9 வழித்தட அலுவலா்கள், 39 முதன்மை கண்காணிப்பாளா்கள், 39 துறை அலுவலா்கள், 396 அறை கண்காணிப்பாளா்கள், 66 பறக்கும் படை அலுவலா்கள் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com