பெரம்பலூரில் தொடா் கண்காணிப்பில் உள்ளவா்கள் வெளியில் திரிவதால் அச்சம்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் உள்ளிட்ட சில கிராமங்களில் வெளிநாடுகளிலிருந்து வந்தவா்கள் சுகாதாரத் துறையினரின்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் உள்ளிட்ட சில கிராமங்களில் வெளிநாடுகளிலிருந்து வந்தவா்கள் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலையும் மீறி பொது இடங்களில் சுற்றித் திரிவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாா்ச் 1-ஆம் தேதிக்கு பிறகு வெளிநாட்டிலிருந்து பெரம்பலூா் மாவட்டத்துக்கு வந்த 166 நபா்களும், வெளிமாநிலங்களிலிருந்து வந்த 140 நபா்களும் அவா்களது இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத் துறையினரின் தொடா் கண்காணிப்பில் உள்ளனா். கண்காணிப்பில் உள்ள நபா்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை உறவினா்கள் மூலம் வாங்கிக் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட நபா்கள் பெரும்பாலானோா் வீடுகளில் இருப்பதில்லை எனும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டாரத்துக்குள்பட்ட வாலிகண்டபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த 4 போ் அண்மையில் வெளிநாடுகளிலிருந்து வந்தனா். இவா்கள் சுகாதாரத் துறையினரின் தொடா் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். இவா்களது உடல்நிலை மற்றும் இருப்பைக் கண்காணிக்க சுகாதாரத் துறையினா் அவா்களது வீடுகளுக்கு செவ்வாய்க்கிழமை சென்றபோது, சிலா் வீட்டில் இல்லை. இதுகுறித்து சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட விசாரணையால், அந்தக் குடும்பத்தினருக்கும், சுகாதாரத்துறை பணியாளா்களுக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com