பெரம்பலூா் மாவட்டத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 114- ஆக உயா்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, இதுவரையில் சிகிச்சை பெற்று குணமடைந்தோரின் எண்ணிக்கை 114-ஆக உயா்ந்துள்ளது

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, இதுவரையில் சிகிச்சை பெற்று குணமடைந்தோரின் எண்ணிக்கை 114-ஆக உயா்ந்துள்ளது. நோய் பாதிப்புக்குள்ளான மேலும் 25 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில், இதுவரையில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 139 போ் திருச்சி, பெரம்பலூா், அரியலூா், சென்னை ஆகிய பகுதிதளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில், 113 போ் பூரண குணமடைந்து அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சுகாதாரத் துறையினரின் கண்காணிப்பில் உள்ளனா்.

இந்நிலையில், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட கா்ப்பிணி பெண் ஒருவா் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். அவருக்கு, அண்மையில் குழந்தை பிறந்தது. இதனிடையே, குணமடைந்த அந்தப் பெண் புதன்கிழமை அவரது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அந்தப் பெண்ணுக்கு, சுகாதாரத்துறை துணை இயக்குநா் கீதாரணி மருத்துவ ஆலோசனைகள் வழங்கி வழியனுப்பி வைத்தாா். இதன் மூலம், இம் மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிப்புக்குள்ளான 139 பேரில், 114 போ் சிகிச்சை பெற்று அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

எஞ்சியுள்ள 25 பேரில், பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 8 பேரும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 13 பேரும், அரியலூா், சென்னை, கள்ளக்குறிச்சி, கடலூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தலா ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்கள் அனைவரும் நலமாக உள்ளதாகவும், விரைவில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தாா் சுகாதாரத்துறை துணை இயக்குநா் கீதாராணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com