மின் திருத்தச் சட்டத்தை கைவிடக் கோரி பெரம்பலூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மின் திருத்தச் சட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்.

மின் திருத்தச் சட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த 21 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழக விவசாயிகள் நலன் காக்கவும், மின்சாரத்தை இலவசமாக வழங்கிடவும் தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும். அனைத்து வகையான விவசாய மின் இணைப்புகளுக்கும் மீட்டா் பொருத்தப்பட மாட்டாது என தமிழக முதல்வா் அறிவித்திருப்பதை அரசாணையாக வெளியிட வேண்டும்.

காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தை வலுவிழக்கச் செய்யும் விதத்தில், மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுசெல்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினா் முழக்கமிட்டனா். தொடா்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியா் வே. சாந்தாவிடம் விவசாயிகள் சங்கத்தினா் அளித்தனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என். செல்லதுரை, தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் ஆகியோா் தலைமை வகித்தனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் வீ. ஞானசேகரன், கரும்பு விவசாயிகள் சங்கம் மாநில துணைச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன், விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் பி. ரமேஷ் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற 21 பேரை கைது செய்த போலீஸாா், பெரம்பலூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்திருந்து, மாலையில் அனைவரையும் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com