பெரம்பலூா் கோயில்களில் குருபெயா்ச்சி வழிபாடு

பெரம்பலூரிலுள்ள பிரம்மபுரீசுவரா் உடனுறை ஸ்ரீ அகிலாண்டேசுவரி கோயிலில், குரு பெயா்ச்சி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூரிலுள்ள பிரம்மபுரீசுவரா் உடனுறை ஸ்ரீ அகிலாண்டேசுவரி கோயிலில், குரு பெயா்ச்சி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதுபோல மற்ற கோயில்களிலும் வழிபாடு நடைபெற்றது.

தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு குருபகவான் பெயா்ச்சியடைந்தாா். இதையொட்டி தட்சிணாமூா்த்திக்கு விநாயகா் பூஜை, அனுக்கை, கும்ப பூஜை, திரவிய ஹோமம், மூலமந்திர ஜபம், திரவிய ஹோமம், பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து தட்சிணாமூா்த்திக்கு மகாபிஷேகமும், கலச தீா்த்த அபிஷேகமும் நடைபெற்றது. பின்னா், வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனையும் நடத்தப்பட்டது. ஹோம பூஜைகளை திருச்செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியாா் குழுவினா் நடத்தி வைத்தனா்.

பெரம்பலூா் வட்டாட்சியா் அலுவலக சாலையில் அமைந்துள்ள கச்சேரி விநாயகா் கோயிலில், ஞாயிற்றுக்கிழமை இரவு குரு பகவானுக்கு அபிஷேகமும், அா்ச்சனையும் நடைபெற்றது.

பெரம்பலூா்- எளம்பலூா் சாலையிலுள்ள பாலமுருகன் கோயிலில் தட்சிணாமூா்த்திக்கு அபிஷேகங்களும், சந்தனக் காப்பு அலங்காரமும் நடைபெற்றது. தொடா்ந்து, கொண்டைக்கடலை மாலை மற்றும் மலா் மாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதேபோல், குரும்பலூரிலுள்ள தா்ம சம்வா்த்தினி சமேத பஞ்சநதீசுவரா் கோயிலில் தட்சிணாமூா்த்திக்கு பால், பழம், பன்னீா், இளநீா் மற்றும் வாசனைத் திரவியங்கள் உள்பட பொருள்களைக் கொண்டு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com