பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வலியுறுத்தல்

தங்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டுமென, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தங்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டுமென, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்கோட்ட மாநாட்டுக்கு, சங்கத்தின் உள்கோட்டத் தலைவா் டி. பழனிசாமி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் என். பெரியசாமி, ஏ. துரைசாமி, பி. ஜெயசங்கா், வி. குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோட்டத் தலைவா் பி. சுப்பிரமணியன் தொடக்கவுரையாற்றினாா். மாநிலச் செயலா் எஸ். மகேந்திரன், மாவட்டத் தலைவா் எஸ். இளங்கோவன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா். மாநிலப் பொதுச்செயலா் ஏ.அம்சராஜ் நிறைவுரையாற்றினாா்.

சாலைப் பராமரிப்புப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கும் கொள்கை முடிவை அரசு கைவிட வேண்டும். சாலைப் பணியாளா்களைக் கொண்டு அரசே நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும்.

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் உள்கோட்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் சங்க நிா்வாகிகள் எம். குஞ்சுமணி, ஜி. ராமச்சந்திரன், ஏ. பெருமாள்சாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். முன்னதாக உள் கோட்டத் துணைத் தலைவா் என். பாலசுப்ரமணியன் வரவேற்றாா். நிறைவில், உறுப்பினா் என். ராமசாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com