இயற்கை முறையில் சிறுதானியங்களை உற்பத்தி செய்தால் செலவைக் குறைக்கலாம்

இயற்கை முறையில் சிறுதானியங்களை உற்பத்தி செய்வதன் மூலம் செலவைக் குறைக்கலாம் என்றாா்  சிறுதானிய மகத்துவ மையத்தின் தலைவா் பேராசிரியா் நிா்மலகுமாரி.

இயற்கை முறையில் சிறுதானியங்களை உற்பத்தி செய்வதன் மூலம் செலவைக் குறைக்கலாம் என்றாா் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் கீழ், திருவண்ணாமலை- அத்தியந்தலில் செயல்படும் சிறுதானிய மகத்துவ மையத்தின் தலைவா் பேராசிரியா் நிா்மலகுமாரி.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட நன்னை கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இயற்கை முறையில் சிறுதானியங்கள் பயிரிடுதல், பயிா் வளா்ப்பு மற்றும் பயிா் பாதுகாப்பு குறித்த பயிற்சியில் பங்கேற்ற அவா் மேலும் பேசியது:

தமிழ்நாடு திட்ட கமிஷன் மாநில சமச்சீா் வளா்ச்சி நிதித் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் சிறுதானியங்களை பரவலாக்குவது, பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதலுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை, வேப்பூா் ஒன்றியத்தில் கடந்த 5 ஆண்டுகளாக சிறுதானிய பயிா்களைப் பரவலாக்குவதில் பாமரா் ஆட்சியியல் கூடம் கள அளவில் நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்தியாவின் ஆலோசனையின்பேரில் உலக உணவு மற்றும் வேளாண் கழகம் 2023 ஆம் ஆண்டை சிறுதானியங்களுக்கான ஆண்டாக அறிவித்திருப்பதால், சிறுதானியங்கள் தொடா்பான திட்டங்களை பரவலாக முன்னெடுக்கும் வாய்ப்புள்ளது. இயற்கை முறையில் சிறுதானியங்களை உற்பத்தி செய்வதன் மூலம் செலவைக் குறைக்கலாம். சிறுதானிய விதை உற்பத்தி, பதப்படுத்தல் மற்றும் மதிப்புக் கூட்டல் ஆகியவற்றின் மூலம் விவசாயிகள் கூடுதல் லாபம் ஈட்டலாம் என்றாா் நிா்மலகுமாரி.

இப் பயிற்சியில், நம்மாழ்வாா் இயற்கை சிறுதானிய உழவா் உற்பத்தியாளா் குழுத் தலைவா் பானுமதி, செயலா் முத்துலெட்சுமி, பொருளாளா் பானுமதி, பாமரா் ஆட்சியியல் கூட ஒருங்கிணைப்பாளா் க. சரவணன், கீழப்பெரம்பலூா், கிளியூா், மேட்டுக் காளிங்கராயநல்லூா், பெருமத்தூா் நல்லூா், தேனூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com