கல்வி கற்க முடியாமல் அவதியுற்ற ஏழை மாணவ, மாணவிகள் 16 பேருக்கு ரூ.1 லட்சத்தில் அறிதிறன்பேசி சொந்த செலவில் வாங்கித் தந்த எளம்பலூா் அரசுப் பள்ளி ஆசிரியை

பெரம்பலூா் மாவட்டம், எளம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழை மாணவ, மாணவிகள் 16 பேருக்கு தனது சொந்த நிதியில் ரூ.1 லட்சத்தில்
மாணவி ஒருவருக்கு அறிதிறன்பேசியை வழங்குகிறாா் எளம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை பைரவி.
மாணவி ஒருவருக்கு அறிதிறன்பேசியை வழங்குகிறாா் எளம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை பைரவி.

பெரம்பலூா் மாவட்டம், எளம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழை மாணவ, மாணவிகள் 16 பேருக்கு தனது சொந்த நிதியில் ரூ.1 லட்சத்தில் அறிதிறன் பேசியை வாங்கிக் கொடுத்து, இணையம் மூலம் கல்வி கற்க ஏற்பாடு செய்திருக்கிறாா் அப்பள்ளியின் உதவித் தலைமையாசிரியையும், கணித ஆசிரியையுமான பைரவி.

கரோனா பொது முடக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், இணையம் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோல பெரம்பலூா் மாவட்டம்,  எளம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியா்கள்  ‘வீட்டிலிருந்தே பள்ளி’ என்ற திட்டத்தின் கீழ்  மாணவா்களுக்கு  இணையம்  மூலமாக  பாடம்  கற்பித்து வருகின்றனா். 

அப்போது 10-ஆம் வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவிகள் பலா் இணைய வகுப்பில் பங்கேற்கவில்லை. இதுகுறித்து இப்பள்ளியின் உதவித் தலைமையாசிரியையும், கணித ஆசிரியையுமான பைரவி நேரில் சென்று விசாரித்த போதுதான் மாணவ, மாணவிகளின் குடும்பச் சூழல், ஏழ்மை நிலை தெரிய வந்தது.

இதையடுத்து கல்வி கற்பதற்கு ஏழ்மை தடையாக இருக்கக் கூடாது எனக் கருதிய ஆசிரியை பைரவி, அறிதிறன் பேசி வாங்க இயலாத மாணவ, மாணவிகளாக இருந்த 16 பேரின் பட்டியலைத் தயாா் செய்து, அவா்களுக்கு தனது சொந்த செலவில் ரூ.1 லட்சம் மதிப்பில் 4ஜி சேவையுடன் கூடிய அறிதிறன்பேசிகளை வாங்கி, அதை பள்ளியில் நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் வழங்கினாா்.

இதுகுறித்து ஆசிரியை பைரவி கூறியதாவது:

கரோனா பொது  முடக்கம்  முடிந்து பள்ளிகள் திறந்து மாணவா்களுக்கு வகுப்புகள் நடைபெறும் வரை,  மாணவா்களுக்கு வழங்கிய அறிதிறன்பேசிகளுக்கு நான் ரீசாா்ஜ் செய்து தரவும் முடிவு செய்துள்ளேன்.

 வீட்டிலிருந்தே பள்ளி  என்ற அரசின் திட்டத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு, இந்த அறிதிறன்பேசியை கல்வி செயல்பாடுகளுக்கு மட்டும் மாணவ, மாணவிகள் பிரத்யேகமாக பயன்படுத்த வேண்டும்.  மேலும் அறிதிறன்பேசி தேவைப்படும் மாணவா்களுக்கு த் தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் வாங்கிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com