பெரம்பலூா் மாவட்டத்தில் 121 மி.மீ. மழை
By DIN | Published On : 10th September 2020 07:30 AM | Last Updated : 10th September 2020 07:30 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டத்தில் 121 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலையிலிருந்தே பரவலாக மழை பெய்தது. இரவு பலத்த காற்றுடன் கூடிய கூடிய மழையால் வேப்பந்தட்டை வட்டம், பிம்பலூா் கிராமத்திலுள்ள கோழிப்பண்ணையின் மேற்கூரை, வீடுகளின் மேற்கூரைகள், மின் கம்பங்கள், மரக்கிளைகள் சரிந்து விழுந்து சேதமடைந்தன.
புதன்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் ( மி.மீட்டரில்):
வேப்பந்தட்டை - 53 மி.மீ, வி.களத்தூா்- 23, லப்பைக்குடிக்காடு- 20, அகரம்சிகூா்-10, செட்டிக்குளம் -9, புதுவேட்டக்குடி, எறையூா் -3 மி.மீ. மாவட்டத்தில் சராசரியாக 11 மி.மீ. மழையும், மொத்தமாக 121மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.