காலமானாா் தியாகி பொ. ரெங்கசாமி
By DIN | Published On : 18th September 2020 12:21 AM | Last Updated : 18th September 2020 12:21 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டம், வரகுபாடி கிராமத்தைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி பொ. ரெங்கசாமி (99) உடல் நலக்குறைவால் புதன்கிழமை மாலை காலமானாா்.
பெரம்பலூரில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்த இவா், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாா். வரகுபாடிக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்கு ஆட்சியா் வே. சாந்தா வியாழக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.
பின்னா் ரெங்கசாமியின் உடல் மாலையில் அடக்கம் செய்யப்பட்டது. ரெங்கசாமியின் மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டாா். திருமணமான செல்லப்பாப்பு, அழகம்மாள், ஜோதி என 3 மகள்கள் உள்ளனா்.
தொடா்புக்கு: 8695123489.