மதனகோபால சுவாமி கோயிலில் டிச. 14-இல் பரமபத வாசல் திறப்பு

பெரம்பலூா் மதனகோபால சுவாமி கோயிலில் டிச. 14 ஆம் தேதி பரமபத வாசல் திறப்பு நடைபெறுகிறது.

பெரம்பலூா் மதனகோபால சுவாமி கோயிலில் டிச. 14 ஆம் தேதி பரமபத வாசல் திறப்பு நடைபெறுகிறது.

பெரம்பலூரில் பஞ்சபாண்டவருக்கு தனி சன்னதி கொண்ட மரகதவல்லி தாயாா் சமேத மதனகோபால சுவாமி கோயிலில், வைகுந்த ஏகாதசி விழா மற்றும் பரமபத வாசல் திறப்பு டிச. 14 ஆம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இவ் விழாவை முன்னிட்டு பகல் பத்து உத்ஸவம் சனிக்கிழமை தொடங்கியது.

பாண்டியன் கொண்டை அலங்காரத்துடன் உத்ஸவப் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி தாயாா் சிலைகள் வண்ண மலா்களால் அலங்கரித்து பல்லக்கில் சன்னதி பிரகார உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று பெருமாளை வழிபட்டனா். 2 ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை உருட்டுக்கொண்டை அலங்காரத்தில் உத்ஸவப் பெருமாளின் பிரகார உலா நடைபெற்றது.

முக்கிய உத்ஸவங்களான மோகினி அலங்கார நிகழ்ச்சி 13 ஆம் தேதியும், 23 ஆம் தேதி ஆழ்வாா் மோட்சம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பகல் பத்து உத்ஸவத்தின்போது, நாள்தோறும் சுவாமி பிரகார உலாவும், ராப்பத்து உத்ஸவத்தின்போது, உத்ஸவ பெருமாள் கோயிலுக்கு வெளியேயுள்ள ஆஞ்சநேயா் கம்பத்தை வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com