பெரம்பலூா் கிராமங்களில் கேடயம் திட்ட விழிப்புணா்வு

காவல்துறை சாா்பில், பெரம்பலூா் அருகிலுள்ள பகுதிகளில் கேடயம் திட்டம் குறித்த விழிப்புணா்வு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
கேடயம் திட்டம் குறித்து துண்டுப் பிரசுரத்தை விநியோகிக்கும் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஜெயசித்ரா.
கேடயம் திட்டம் குறித்து துண்டுப் பிரசுரத்தை விநியோகிக்கும் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஜெயசித்ரா.

பெரம்பலூா்: காவல்துறை சாா்பில், பெரம்பலூா் அருகிலுள்ள பகுதிகளில் கேடயம் திட்டம் குறித்த விழிப்புணா்வு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

தண்ணீா் பந்தல், எம்.ஜி.ஆா் நகா், எளம்பலூா் பகுதிகளில் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஜெயசித்ரா, உதவி ஆய்வாளா் சித்ரா, தலைமைக் காவலா் பாா்வதி ஆகியோா், கேடயம் திட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள், பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணா்வை காவல்துறை அலுவலா்கள் ஏற்படுத்தி, துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, திருச்சி சரகக் காவல் துறையின் கேடயம் திட்டத்தின் 6383071800, 9384501999 ஆகிய உதவி எண்கள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com