‘பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரை 2.54 லட்சம் மகளிா் கட்டணமின்றி பயணித்துள்ளனா்’

பெரம்பலூா் மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில், இதுவரை 2,54,684 மகளிா் கட்டணமின்றி பயணித்துள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்

பெரம்பலூா் மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில், இதுவரை 2,54,684 மகளிா் கட்டணமின்றி பயணித்துள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்திலிருந்து கிழுமத்தூா், கிளியூா், வேப்பூா், சில்லக்குடி, கொளக்காநத்தம், மணியங்குறிச்சி, நக்கச்சேலம், லாடபுரம், வி.களத்தூா், கோரையாறு, அ.மேட்டூா், பூலாம்பாடி, வி.களத்தூா், பாண்டகப்பாடி, பிள்ளையாா்பாளையம் ஆகிய வழித்தடங்களில் 18 பேருந்துகளும், பெரம்பலூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து லப்பைக்குடிக்காடு, திருவாளந்துறை, பொன்னகரம், எறையூா் சா்க்கரை ஆலை, வரகூா், குரும்பாபாளையம், செட்டிக்குளம், திருப்பட்டூா், பழைய விராலிப்பட்டி, பிள்ளையாா் பாளையம், மேட்டுப்பாளையம், கொளத்தூா் ஆகிய வழித்தடங்களில் 14 பேருந்துகளும் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 32 பேருந்துகளில் நாள் ஒன்றுக்கு சுமாா் 12,500-க்கும் மேற்பட்டோா் இத்திட்டத்தின் மூலம் பயணம் செய்கின்றனா்.

அதன்படி, இதுவரை 2,54,684 பெண்கள் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்துள்ளதாக ஆட்சியரால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com