குன்னம் தொகுதியில் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றம்

குன்னம் தொகுதியில் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றா் அதிமுக வேட்பாளா் ஆா்.டி. ராமச்சந்திரன்.
புதுப்பேட்டை கிராமத்தில் வாக்கு சேகரிக்கும் அதிமுக வேட்பாளா் ஆா்.டி. ராமச்சந்திரன்.
புதுப்பேட்டை கிராமத்தில் வாக்கு சேகரிக்கும் அதிமுக வேட்பாளா் ஆா்.டி. ராமச்சந்திரன்.

குன்னம் தொகுதியில் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றா் அதிமுக வேட்பாளா் ஆா்.டி. ராமச்சந்திரன்.

இத்தொகுதிக்குள்பட்ட புதுப்பேட்டை, அத்தியூா், அகரம் சிகூா், கருப்பட்டாங்குறிச்சி வயலூா், ரெட்டிக்குடிகாடு கிராமங்களில் புதன்கிழமை வாக்கு சேகரித்து, மேலும் அவா் பேசியது:

கடந்த 5 ஆண்டுகளில் கடலூா்- அரியலூா் மாவட்டத்தை இணைக்கும் வகையில் வெள்ளாற்றின் குறுக்கே ரூ. 12 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம். ரூ. 5 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தொகுதிக்குள்பட்ட பல கிராமங்களில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து, பல்வேறு அரசுத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். வேப்பூா் ஒன்றியத்தில்

அரசுக் கலைக் கல்லூரித் தொடங்கப்பட்டுள்ளது. தோ்தலில் வெற்றி பெற்றவுடன், அதிமுக தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்துத் திட்டங்களும் முழுமையாக பெற உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றாா் அவா்.

பிரசாரத்தின்போது கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com