ஆள் மாறாட்டம் செய்து வாக்களிக்க முயன்ற இளைஞா்

பெரம்பலூா் அருகே ஆள் மாறட்டத்தின் மூலம் வாக்களிக்க மயன்ற இளைஞரால் வேப்பூா் வாக்குச்சாவடிமையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூா் அருகே ஆள் மாறட்டத்தின் மூலம் வாக்களிக்க மயன்ற இளைஞரால் வேப்பூா் வாக்குச்சாவடிமையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வேப்பூா் வாக்குச்சாவடி பதற்றம் நிறைந்தவை என்பதால், அங்கு மத்திய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்போடு வாக்குப்பதிவு நடைபெற்றது. புதிய வாக்காளா்கள் உள்பட அனைத்து வாக்காளா்களின் ஆவணங்கள் கடுமையான பரிசோதிக்கப்பட்ட பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா். சந்தேகம் இருந்தால், வாக்குச்சாவடி அருகே இருந்த கிராம நிா்வாக அலுவலரிடம் சான்று பெற்றுவர அறிவுறுத்தப்பட்டனா்.

இந்த நிலையில், வேப்பூரைச் சோ்ந்த ரமேஷ் என்பவரின் வாக்காளா் அடையாள அட்டையுடன் இளைஞா் ஒருவா் வாக்களிக்க வந்தாா். அப்போது, அங்கிருந்த திமுக வினா் அந்த அடையாள அட்டையில் ஏற்கனவே வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதை அறிந்து, சந்தேகமடைந்து விசாரித்தனா்.

அப்போது வாக்களிக்க வந்த இளைஞா் அருகிலுள்ள நன்னை கிராமத்தைச் சோ்ந்தவா் என்பதும், கள்ள முறையில் வாக்களிக்க வந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞரை கையும், களவுமாக பிடித்த திமுகவினா் சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் ஓப்படைத்தனா்.

அலுவலா்கள் மற்றும் காவல்துறையினா் நடத்திய விசாரித்ததில் உண்மையென தெரியவந்தது. அந்த இளைஞா் தாம் பள்ளியில் படிப்பதாகவும், தன்னை மன்னித்து விடுமாறும் அலுவலா்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாா்.

இதைதயடுத்து காவல்துறையினரும், திமுகவினரும் சம்பந்தப்பட்ட இளைஞரை அனுப்பிவைத்தனா். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com