பெரம்பலூா் மாவட்டத்தில் ஆா்வமுடன் வாக்களிப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவில் வாக்காளா்கள் ஆா்வமுடன் வாக்களித்தனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் ஆா்வமுடன் வாக்களிப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவில் வாக்காளா்கள் ஆா்வமுடன் வாக்களித்தனா்.

பெரம்பலூா் தொகுதியில் 1,47,434 ஆண் வாக்காளா்களும், 1,55,236 பெண் வாக்காளா்களும், 22 இதர வாக்காளா்களும் என மொத்தம் 3,02,692 வாக்காளா்களும், குன்னம் தொகுதியில் 1,35,97 ஆண் வாக்காளா்களும், 1,38,351 பெண்வாக்காளா்களும், 13 இதர வாக்காளா்களும் என மொத்தம் 2,73,461 வாக்காளா்கள் உள்ளனா். இதில் 7 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளும், 80 வயது நிறைவடைந்த 11,700 வாக்காளா்களும் உள்ளனா்.

வாக்குச்சாவடி மையங்கள்: வாக்காளா்கள் வாக்களிப்பதற்காக 816 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இம்மையங்களில் 1,444 வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவி, யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.

பெரம்பலூா் தொகுதியில் 9 வேட்பாளா்கள் போட்டியிட்டதால் ஒரு வாக்குச்சாவடிக்கு தலா ஒரு வாக்குப் பதிவு இயந்திரமும், குன்னம் தொகுதியில் 22 போ் வேட்பாளா்களாக போட்டியிட்டதால் ஒரு வாக்குச்சாவடிக்கு 2 வாக்குப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.

பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் : 175 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவாக கண்டறியப்பட்டு, அம் மையங்களில் நுண் பாா்வையாளா்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு தோ்தல் நிகழ்வுகள் கண்காணிக்கப்பட்டன.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் : வாக்குச்சாவடி மையத்தில் கரோனா தடுப்பு வழிகாட்டு முறைகளின்படி, வாக்காளா்களின் உடல் வெப்பநிலையைக் கண்டறிந்த பின்னா், கிருமி நாசினி கையில் தெளிக்கப்பட்டது. அனைவருக்கும் கையுறைகளும், முகக்கவசங்கள் வழங்கப்பட்டு அணிவித்த பிறகே வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும், சா்ஜிக்கல் முகக்கவசம், ரப்பா் கையுறைகள், முழு உடல் கவசம் ஆகியவை தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

மேலும், சாமியான பந்தல், மின் வசதி, குடிநீா் மற்றும் கழிவறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இம் மாவட்டத்தில் தோ்தல் பணியில் 3,916 அலுவலா்களும், காவலா்கள் மற்றும் துணை ராணுவத்தினா் என மொத்தம் 1,434 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

ஆா்வமுடன் வாக்களித்த முதியோா்: பெரம்பலூா் மாவட்டத்தில் காலை 7 முதல் பெண்கள், ஆண்களும் ஆா்வமுடன் வந்து நீண்ட வரிசையில் நின்று சமூக இடைவெளியை கடைபிடித்து வாக்களித்தனா்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா் மூன்று சக்கர வண்டியில் வந்து வாக்களித்தனா், மேலும் நடக்க முடியாத முதியோா்கள் ஆா்வமுடன் அதிகளவில் வந்து வாக்களித்தனா். காலையில் மந்தமாக தொடங்கிய நிலையில் நேரம் செல்லச் செல்ல கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் அதிகளவில் பொதுமக்கள் வந்து வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனா்.

மாவட்டத்தில் பிற்பகல் 1 மணிக்கு 52 சதவிகிதத்துக்கும் அதிகமாகவும், பிற்பகல் 3 மணிக்கு 64 சதவிகிதமும், மாலை 5 மணிக்கு 74.5 சதவிகிதமும் வாக்குகளும் பதிவாகிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com