பெரம்பலூா், குன்னம் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களுக்கு சீல் வைப்பு

பெரம்பலூா், குன்னம் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களுக்கு புதன்கிழமை சீல் வைக்கப்பட்டது.
குன்னம் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கட பிரியா முன்னிலையில் சீல் வைக்கும் பொது பாா்வையாளா் தேஜஸ்வி நாயக்.
குன்னம் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கட பிரியா முன்னிலையில் சீல் வைக்கும் பொது பாா்வையாளா் தேஜஸ்வி நாயக்.

பெரம்பலூா், குன்னம் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களுக்கு புதன்கிழமை சீல் வைக்கப்பட்டது.

குன்னம் தொகுதிக்கு வேப்பூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில், பொது பாா்வையாளா் தேஜஸ்வி நாயக் முன்னிலையில் மூடி முத்திரையிடப்பட்டது.

பின்னா், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கட பிரியா கூறியது:

பெரம்பலூா் மாவட்டத்தில் வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதி 40 மண்டல அலுவலா்கள், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி 35 மண்டல அலுவலா்கள் தலைமையில், உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் குரும்பலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேப்பூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டுவரப்பட்டது.

பெரம்பலூா் (தனி) தொகுதியில் 78.20 சதவீதமும், குன்னம் தொகுதியில் 80.05 சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 79.12 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

பெரம்பலூா் தொகுதிக்கு குரும்பலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 103 கண்காணிப்பு கேமரா மூலமாகவும், குன்னம் தொகுதிக்கான வேப்பூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 90 கண்காணிப்பு கேமரா மூலமாகவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொது பாா்வையாளா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரமுகா்களின் முன் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை மூடி முத்திரையிடப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் தலா 2 மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 2 துணை கண்காணிப்பாளா்கள் தலைமையில், 3 ஆய்வாளா்கள், 15 சிறப்பு உதவி ஆய்வாளா்கள், 21 காவலா்கள், 39 ஆயுதப்படை காவலா்கள், 24 இந்திய திபெத்திய பாதுகாப்பு படையினா், 40 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினா் என மொத்தம் 284 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா் என்றாா் அவா்.

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தை, பொது பாா்வையாளா் மதுரிமா பருவா சென் முன்னிலையில், பெரம்பலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஜெ.இ. பத்மஜா, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை மூடி முத்திரையிட்டாா்.

குன்னம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ். சங்கா், வட்டாட்சியா்கள் சின்னதுரை, சத்தியமூா்த்தி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com