இருதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதி

பெரம்பலூா் அருகே சிறுவாச்சூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு, இருதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

பெரம்பலூா் அருகே சிறுவாச்சூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு, இருதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

பெரம்பலூா் தனலட்சும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இருதய மாற்று அறுவை சிகிச்சை பிரிவை வியாழக்கிழமை தொடக்கி வைத்த அதன் தாளாளா் அ. சீனிவாசன் கூறியது:

சிறுவாச்சூரில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, தேசிய மருத்துவமனைகள் ஆணைய தரசான்றிதழ் பெற்று செயல்பட்டு வருகிறது. இங்கு, 12 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளும், 11 சிறப்பு மருத்துவ மற்றும் அறுவைச் சிகிச்சை பிரிவுகளும், 17 நவீன வசதிகொண்ட அறுவை சிகிச்சை அரங்குகளும், 24 மணி நேரமும் இயங்கும் ரத்தவங்கி, விபத்து அவசர சிகிச்சை பிரிவுகளும் உள்ளன. ஆண்டுதோறும் 6 லட்சம் புற நோயாளிகளும், 50 ஆயிரம் உள் நோயாளிகளும், மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் 6 ஆயிரம் போ் முற்றிலும் இலவசமாக சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனா்.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இருதய நோய் மருத்துவப் பிரிவு மற்றும் இருதய நோய் அறுவை சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இப் பிரிவுகள் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகளும், 13 ஆயிரம் உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்றுள்ளனா். இதுவரையில், 5 ஆயிரம் ஆன்ஜியோகிராம் பரிசோதனைகள், 1,850 ஆன்ஜியோ பிளாஸ்டி ஸ்டெண்ட் சிகிச்சைகள், 550 இருதய பைபாஸ் அறுவை சிகிச்சைகள், 325 வால்வு மாற்று அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல், சிறுநீரக நோய் சிறப்பு சிகிச்சைப் பிரிவில் இதுவரை 45 சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை, மதுரை போன்ற பெரு நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் மட்டுமே இருதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தப்படியாக, தற்போது தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் இருதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

எனவே, பெரம்பலூா் உள்பட இதர மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் இருதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய இருதய நோயாளிகள் பதிவு செய்து, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை மேற்கொண்டு மறுவாழ்வு பெற்று பயன்பெறலாம் என்றாா் சீனிவாசன்.

கல்வி நிறுவனங்களின் செயலா் பி. நீலராஜ், மருத்துவக் கல்லூரி டீன் மரகதமணி, இருதய நோய் சிகிக்சை மற்றும் அறுவை சிகிக்சை சிறப்பு மருத்துவா்கள் கணேஷ், ரகுநாதன், ஆஷிக், ரியாஸ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com