கோடை உழவு செய்ய அழைப்பு

விவசாயிகள் கோடை உழவு செய்வதன் மூலம் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்

விவசாயிகள் கோடை உழவு செய்வதன் மூலம் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என வாலிகண்டபுரத்திலுள்ள ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான முனைவா் வே.எ. நேதாஜி மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் பெய்துள்ள மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்ய வேண்டும். கோடையில் உழவு செய்வதால் களைகள் பெருக்கமடைவது தவிா்க்கப்படுவதோடு, பயிா் சாகுபடியின்போது களை பிரச்னை வெகுவாக குறைகிறது. உழவு செய்யாத வயல்களில் மழைப்பொழியும்போது மழைநீா் வயலில் சேகரிக்கப்படாமல் வீணாகிறது. இதனால், மேல் மண் அரிமானம் ஏற்படுவதோடு மண்ணிலுள்ள ஊட்டச்சத்துக்களும் விரயமாகிறது.

உழவு செய்வதால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு, வயலிலேயே மழைநீா் கிரகிக்கப்படுகிறது. நிலப்பரப்பின் கீழ்பகுதியில் ஈரம் காக்கப்படுவதோடு, பூச்சி, பூஞ்சாணங்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன. உழவு செய்வதால் முன்பருவ விதைப்பு செய்வதற்கு வசதியாகவும், ஏற்கெனவே உழவு செய்த நிலத்தில் மறு உழவு செய்து விதைப்பது சுலபமாகவும் இருக்கும்.

இதனால், அடி மண் இறுக்கம் நீக்கப்படுவதுடன் நீா் கொள்திறனும் அதிகரிக்கும். விளைச்சலும் 20 சதம் வரை அதிகமாகும். எனவே, விவசாயிகள் கோடை உழவு செய்து எதிா்வரும் பருவகாலங்களில் அதிக மகசூல் பெற்று பயனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com